தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக ஓய்வு பெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நியமனம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013-ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 1960-ம் […]