உத்தராகண்டம்: இன்று கர்வால் மோட்டார்ஸ் பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தின் குபி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராம்நகரில் உள்ள பவுரி-அல்மோரா எல்லையில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ்க்கும் தகவலை தெரிவித்தனர். […]
Forest Fire : உத்ரகாண்ட்டில் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் காட்டுத்தீ அதிகளவில் பரவும் சூழல் நிலவும். எனவே அதனை கருத்தில் கொண்டு, காட்டு பகுதியில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ, அல்லது சிறிய அளவில் தீ மூட்டுவதோ கூட பெரிய அளவிலான காட்டுதீக்கு வழிவகுத்து விடும். உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடா பகுதியில் காட்டுத்தீ பரவி தற்போது அதனை தணிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீயை அணைக்கும் […]
உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் இன்று மிக முக்கிய நிகழ்வாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் உத்தரகாண்ட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யபட்டது. இதனால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த சட்ட மசோதா மீது நேற்று முதல் இன்று வரை விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த சட்ட மசோதா பற்றி உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், இது ஒரு சாதாரண மசோதா அல்ல. இந்தியா […]
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர், எலி வளை தொழிலாளர்கள் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுழலில் கடந்த நவ.12ம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணிகள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 17-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த […]
உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மாதம் ஒன்றுக்கு 31% வீதம் உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.டிஏ உயர்வு என்பது மாநில அரசு ஊழியர்களின் மொத்த சம்பள உயர்வையும் குறிக்கும். உத்தரகாண்ட் அரசு தனது அறிவிப்பில், “ஏழாவது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அனுமதிக்கப்படும் மாநில அரசின் அரசு ஊழியர்களுக்கு, 2021 ஜூலை 1 முதல், மாதத்திற்கு 31% அகவிலைப்படி […]
உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று டேராடூனில் பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று டேராடூனில் பதவியேற்றார். இதனால், உத்தரகாண்டின் 12- வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். […]
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக தேர்வு: இதனையடுத்து,டேராடூனில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்,உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.அதன்படி,டேராடூனில் உள்ள பெரைட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு […]
உத்தரகாண்டின் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தற்போது பதவியேற்றுக் கொண்டார். உத்தரகாண்டின் முதல்வராக பதவியேற்ற பாஜகவை சேர்ந்த தீரத்சிங்ராவத் அவர்கள்,6 மாதங்களில் எம்எல்ஏவாக தேர்வாக முடியாத நிலை ஏற்பட்டதால் ,எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின.இதனால்,அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள கட்சி தலைமையிடம் தீரத் சிங் ஆலோசனை மேற்கொண்ட பிறகு,ஆளுநர் பேபி ராணியிடம் தனது பதவி விலகலுக்கான கடிதத்தை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து,டேராடூனில் நடந்த […]