ஆந்திர பிரதேச மகிளா கமிஷனின் தலைவியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான நன்னாபேனி ராஜகுமாரி சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய அவர், ஆண்களின் நலனுக்காக தனியாக கமிஷன் அமைக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ‘புருஷா கமிஷன்’ என்ற பெயரில் தனியாக ஒரு ஆணையம் அமைக்க வலியுறுத்தியுள்ள அவர், பெண்களின் அராஜகத்திலிருந்து ஆண்களை காக்க இந்த ஆணையம் துணை நிற்கும் என கூறியுள்ளார். […]