கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும் என சீமான் அறிக்கை வெளிட்டுள்ளார். வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்தழித்து, ஒற்றைமயமாக்கலை தீவிரமாகச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சனநாயக விரோதப்போக்கின் செயல்வடிவமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற […]