தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]
சென்னை –தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம். புரட்டாசியில் சிறப்புகள் ; தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகைக்கு உரிய நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது .புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் எனவும் […]