பஞ்சாப்பில் இன்று விடுமுறை அறிவித்தது அம்மாநில அரசு. பஞ்சாப் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 28) விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், வாரியங்கள்/கார்ப்பரேசன்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு கோவிந்த் சிங்கின் தாய் மற்றும் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் ஃபதேகர் சாஹிப்பில் மூன்று நாள் ஷஹீதி ஜோர் மேளாவை குறிக்கும் வகையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.