ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில […]