பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் […]
கொரோனா ஊரடங்கு போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹீரோவாக மாறிய சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். மேலும் அவரை மோகா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. ஆனால், மால்விகாவுக்கு சீட் கொடுத்ததற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் மோகா சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட […]
உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து உள்ளது. பெருபான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கிறது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் […]
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்க்கு 37 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்து பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு. பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். மூன்றாவது கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) சீட் பங்கீடு […]