பஞ்சாப் பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்: நிலத்தடி நீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள்.பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்” என […]
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனையடுத்து, தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் […]
உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கி டெல்லியில் நுழைந்ததால், காவல்துறை கண்ணீர் வெடிகுண்டு வீசியுள்ளது. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வன்முரை தீவிரமடைந்ததை அடுத்து டெல்லி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, இன்று நள்ளிரவு முதல் […]
போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர்அறிவித்தார். டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று அறிவித்தார். கூடுதலாக, லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் கூறுகையில், பஞ்சாப் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் அல்ல என்பதை மையம் புரிந்து கொள்ள வேண்டும், இந்தியா முழுவதும் […]