பஞ்சாபில் 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் நிரப்பப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காலிப்பணியிடங்களை வேகமான நிரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி , பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் […]
அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வீட்டிற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது. இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள், ஆய்வு செய்து 10 […]
பஞ்சாப்:இனி மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவத் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து,கடந்த மார்ச் 16 ஆம் தேதி பஞ்சாப் மாநில முதல்வராக பகவத் மான் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில்,பஞ்சாப் மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும்,குடும்ப அட்டைதாரர்களிடம் நேரம் கேட்டு அதற்கேற்ப பொருட்கள் வீடு தேடி […]
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வெற்றி: இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் […]
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு […]
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வியை எளிதாக்கும் வகையில்,அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 1,75,443 மாணவர்களுக்கு பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். அதன்படி, நேற்று இரண்டாம் கட்டமாக 80,000 பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பஞ்சாப் முதல்வர், எங்கள் அரசு பள்ளிகளில் தடையற்ற […]