கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.இந்நிலையில் புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) 2021-22 குடிமை பட்ஜெட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை குறைக்க 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து நிலைக்குழுவின் தலைவர் ஹேமந்த் ரஸ்னே கூறுகையில் , “கொரோனா தொற்றுநோயை சமாளிக்க பிஎம்சி இதுவரை 250 கோடி முதல் 300 கோடி வரை செலவிட்டுள்ளது” என்றார். புனேவில் தற்போது சுமார் 4,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.