அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை பெற்றார்கள். அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பொருத்தவில்லை. மேலும் , அதிமுக பெயர் பதியப்பட்ட லெட்டர் பேட் பயன்படுத்தவில்லை. ஆனால், ஓபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்னும் அதிமுக கொடியை தனது வாகனத்தில் […]
கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? என புகழேந்திக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி. ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுகவின் செய்தி தொடர்பாளர் இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து கடந்தாண்டு ஜூன் மாதம் நீக்கி அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை மூலம் அறிவித்தனர். […]
அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி இந்த கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் […]
6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி பாமக ஆராய வேண்டும் என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்.பி ஆக உள்ளார். 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு […]