புதுச்சேரி: புதுவையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் கடந்த 5 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும், நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பல்கலை.தேர்வுகள் ஒத்திவைப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தைத் […]