புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே, இது கரையை கடக்க தொடங்கிய நிலையில். […]
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை கனமழையை எதிர்கொள்ள உதவி அழைப்பு எண்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு […]
புதுச்சேரி : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவது போல புதுச்சேரியிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில், கனமழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்த சூழலில், ஏற்கனவே, கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு […]
புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ள காட்சியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விளை நிலங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டர் […]