புதுச்சேரி : புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்ற பிறகே சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அப்பகுதி ஊர்மக்கள் நேற்று (பிப்ரவரி 14) மாலை திரளாக தனியார் பள்ளிக்கு சென்று அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும், […]