தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அப்பகுதிகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆணையர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் […]
பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் […]
எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் என தமிழிசை சவுந்தராஜன் இரங்கல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்றும், செய்தி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது […]