புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து, இன்று காலை 9.30 […]