புதுச்சேரியில் கல்வி கடன் ரத்து – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்டாக் மூலம் தீவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் … Read more

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது!

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 26ம் தேதி தொடங்கி, அன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி, 2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.9,924.41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நிலுவைக் கடன் தொகை ரூ.9,334.78 கோடி. இந்திய அளவில் சராசரி உள்நாட்டு உற்பத்தி 7 … Read more

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு!

புதுச்சேரியில், இன்று சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே இலவச அரிசி பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், இந்த மசோதா தற்போது வரை நடைமுறைப்படுத்தமல் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும்,  ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்தும் எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு

நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதனையடுத்து புதுச்சேரி சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் இன்று இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி இன்று நடைபெற்றது.ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்துவை தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார்.மேலும் நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பதவி ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.