புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்றதிருமண விழாவில் ரசிகர்கள் கூட்டம்நெருக்கியடித்து கலாட்டாவில் ஈடுபட்டதால்மண்டப நாற்காலிகள் சூறையாடப்பட்டன.போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைஅப்புறப்படுத்தி விஜயை பத்திரமாகஅனுப்பிவைத்தனர். விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், […]