புதுச்சேரி , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் 2 இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.இது குறித்து கவர்னர் கிரண்பேடி தனது வாட்ஸ்-அப் பதிவில் பொதுசொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் ரோந்து சென்று சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் 1031 எண்ணை தொடர்பு […]
பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்தி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்துள்ளதே மோடி அரசின் 4 ஆண்டு சாதனை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ள நரேந்திரமோடி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றார். மேலும் மக்கள் கொதிதெழுந்து மோடி தலைமையிலான அரசை அகற்ற தயாராகி வருவதாகவும் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சியில் இதுவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் பங்களிப்பு […]