புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி […]
கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .
திருப்பூரை சேர்ந்தவர் யாஷிகா என்ற ஷீலாஜெயராணி . இவர் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில் சென்னையில் வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். யாஷிகா_விற்கு பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் கடந்த நான்கு மாதங்களாக பெரம்பலூர் G.K.M காலனியில் தங்கியிருந்தனர். இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாஷிகா உடன் கோபித்துக்கொண்டு […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர்கூறுகையில் , ஹெல்மட் கட்டாயம் என்ற பெயரில் விதிமீறி செயல்படும் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தின் விவசாயிகள் பிரச்சனை , தொழிலாளர்கள் பிரச்சினை , பொது மக்களின் சமூக நலத் திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார. இவரின் இந்த போக்கு துணைநிலை ஆளுநருக்கு […]
புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டியில், பல்வேறு வகையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. புதுச்சேரியில் உள்ள தனியார் கிளப் சார்பில் ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டி, 5-வது ஆண்டாக தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜூனியர், இண்டர் மீடியட், பிரடின், ஓபன் போன்ற 6 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மேன், ராட்வீலர், பொம்மரேனியன், பக், ராஜபாளையம் போன்ற வகைகளைச் […]
புதுச்சேரி யூனியன் பிரதேஷ் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த இறுதி வாக்காளர் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட விவரத்தின் படி புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சுழலில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். அவர் […]
புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, காரைக்கால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜன..,14 தேதி தமிழக அரசும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதன் மூலம் 6 நாட்கள் விடுமுறையுடன் இந்தாண்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனால் பொங்கலுக்கு தன் சொந்த ஊர்களுக்கு […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையம் […]
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன். புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், வானம் வசப்படும் புதினத்திற்காக சாகித்யா அகாடெமி விருதையும் பெற்றுள்ளார். பிரபஞ்சனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சியினருடன் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ளித்தார்.
புதுச்சேரி அருகே லிங்காரெட்டிபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லிங்காரெட்டிபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செயல்பட்டு வந்தது. நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு காரணமாக அந்த ஆலை அப்போது மூடப்பட்டது. தற்போது இந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த, மறைமுக ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் பாதிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளும் பாதிக்கப்படும். இதனால் மத்திய அரசு அளித்த முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் […]
புதுச்சேரி மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள், வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா, சித்தன்குடியில் நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது பேசிய அவர், மத்தியில் மாற்று ஆட்சி இருப்பதால்தான், மாற்றாந்தாய் பிள்ளையைப் போன்று, புதுச்சேரி நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.புதுச்சேரியில், மாற்றுத் திறனாளிகள் […]
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்த வயது பெண்களும் அனுமதிப்பது குறித்த விவகாரத்தில், கேரள அரசை எதிர்த்து, புதுச்சேரி பாஜகவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுவையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள், மற்ற மாநில பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த […]
புதுச்சேரி நகர பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக புதுவையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. புதுவையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு கன […]
அமைச்சர்களின் அலுவலக டீ செலவு ரூ.3 கோடியா? என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– புதுச்சேரி முதல்–அமைச்சராக நாராயணசாமி பதவியேற்றது முதல் நிதி நெருக்கடி காரணமாக மக்கள்மேல் பல்வேறு வரிகளை திணித்து வருகிறார். கடந்த 2 ஆண்டில் புதுவை சட்டமன்ற கூட்டம் 50 நாட்கள் கூட நடந்தது கிடையாது.கடந்த 2 ஆண்டில் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு […]
புதுச்சேரி: வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவைக்கு வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானார் வருகை தருகின்றனர். இவர்களில் பல இளம்பெண்கள் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வாடகை மோட்டார் சைக்கிள்களில் ஆண் நண்பர்களுடன் நகரில் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பலர் ஓட்டல்களில் அறைகள் புக்கிங் செய்து தங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு வட மாநில பெண் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தார். […]
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தந்த அடிப்படையில் பணிபுரியும் (PRTC) ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தரத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டம் இன்னும் 4வது நாளாக தொடர்கிறது. மேலான் இயக்குனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களை தினக்கூலியாக மாற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.