புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலுடன் இணைந்து தனது சுய ஆதாயத்திற்காக தேவேந்திரகுல மக்கள் நலன்களை காவு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்தநடவடிக்கையை முறியடித்து தேவேந்திர குல மக்களை பாதுகாப்போம் என்று தேவேந்திர சமுக பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பூ.சந்திரபோஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.முருகவேல்ராஜன், மு.ஊர்காவலன், டாக்டர் இளங்கோ, எம்.சி.கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி தலைவர் […]