மகாராஷ்டிராவில் பணியாளர் தேர்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் -11 ஆம் தேதி திட்டமிடப்பட்ட மாநில பணியாளர் தேர்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகள் ஒத்திவைக்க போவதாக மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தெரிவித்தார். மேலும், தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங்கள் இன்னும் மூடப்பட்டிருப்பதால் அதிக நேரம் படிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடம் இருந்து வந்துள்ளது. […]