கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சில அறிவுறுத்தலை வழங்கினர். அதில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த […]
தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்ட பின் வருகை புரிதல் வேண்டும் என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல். தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் […]
பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் […]
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தல். தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியிருந்தார் இதனிடையே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.இந்த சூழலில்,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதும் 10,11 […]
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு இருந்தார். தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லைஎன தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்து உள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று […]
தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு […]