சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கும் நோக்கில், பொது இடங்களுக்கு வளர்ப்பு நாய்களை அழைத்து வரும்போது வாய்மூடி (மஸ்க்) அணிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதியை மீறினால் நாய்களின் உரிமையாளர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் […]