சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் […]
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இது வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 14,962 மாணவர்கள்தேர்வு எழுதுகின்றனர். மேலும் புதுச்சேரியில் 32 மையங்களிலும் , காரைக்காலில் 9 மையங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வின் போது மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் யாரும் சோதனை செய்யக் கூடாது என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத்தேர்வுக்காக முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. […]