ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது – அமைச்சர் அன்பில் மகேஸ்

Anbil Mahesh

Public Exam: ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இன்றே … Read more

All The Best மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

10th exam

10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி … Read more

#Breaking : 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.03.23 முதல் 03.04.23 வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14.03.23 முதல் 05.04.23 வரையும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 06.04.23 முதல் 20.04.23 வரையும் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வினை 12-ஆம் வகுப்பில் 8.80 … Read more

ரெடியா…10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று … Read more

மாணவர்களே தயாராகுங்க…”பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்” – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

சென்னை:ஜனவரி 3 ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும், மேலும்,ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் … Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதற்கான செய்முறை தேர்வுகள் வரும் 16-ம் தேதி … Read more

12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!

மே 3-ஆம் தேதி திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மறுநாளே தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதில், மே … Read more

10, 12 ஆம்பொதுத்தேர்வு எப்போது..? அமைச்சர் விளக்கம்..!

தேர்தல் தேதிக்கு பின்னர் தான் 10, +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என  அறிவித்துள்ளார். மேலும், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மத்திய அரசு கொண்டு வரும் … Read more

தமிழகத்தில் 10,+2 பொதுத்தேர்வு -ஆணையம் ஆலோசனை..!

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் வந்தனர். நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடந்த நிலையில், இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு -அமைச்சர் செங்கோட்டையன்..!

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இதையடுத்து  10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும் என்பதால் மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு எப்படி இருக்கும்..? பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா..? போன்ற பல்வேறு பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், கொரோனா … Read more