பிஆர் பாண்டியனை தமிழக காவல்துறை கைது செய்து இருப்பது அவசியமற்றது என்று சசிகலா கண்டனம். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், பரந்தூரில் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட […]
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கைது. பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் பி ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு. சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சந்தித்து பேசி வருகிறார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நடவடிக்கைக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி என்று கூறப்படுகிறது.