Tag: Protem Speaker Dilip Patil

தொடங்கியது மகராஷ்டிரா சட்டப்பேரவை – பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள உத்தவ் தாக்கரே அரசு

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டம் துவங்கியுள்ளது.இடைக்கால சபாநாயகர் திலீப் பட்டீல் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பின்பு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image