புதுச்சேரியில் நாளை மதுக்கடை, மதுபானத்துடன் கூடிய உணவு விடுதிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, மீலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை மதுக்கடை, மதுபானத்துடன் கூடிய உணவு விடுதிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . உத்தரவை மீறுவோர் மீது கலால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.