கொடுத்த சொத்தை பெற்றோர் திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. ஒருமுறை வழங்கிய சொத்தை பாதுகாவலர் (கார்டியன்) திரும்ப பெற முடியாது என வாரிசுகளுக்கு வழங்கும் சொத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலச் சட்டத்தின் கீழ், மாற்றப்பட்ட சொத்தில் வழங்குபவரை கவனிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு […]
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம், தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம் செய்யபட்டுள்ளது. அதன்படி, ரூ.411.83 கோடி மதிப்புள்ள ஆம்வே நிறுவனத்தின் அசையும், அசையா செதுக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 வெவ்வேறு […]
என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை. இன்று விலங்குகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வந்தாலும், இந்த விலங்குகளை மனிதர்கள் விட மேலாக நேசிப்பவர்களும் இதே உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் விலங்குகளின் காதலரான அக்தர் இமாம். இவர் மோதி மற்றும் ராணி என்ற இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். இந்த இரண்டு யானைகள் மீதும், மனிதர்களுக்கு மேலாக அன்பு வைத்து வளர்த்து வரும் இவர், தனது […]
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மும்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையை மகனே டிராக்டரை ஏற்றி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம். உடன்பிறந்த சகோதரிகளுக்கும் சொத்தை பிரித்து கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலையை அரங்கேற்றியவனை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு 3 மகள்கள் 2 மகன்கள் என 5 பிள்ளைகள் உள்ளன. அவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை 3 ஏக்கர் வீதம் 5 பேருக்கும் சமமாக எழுதி வைத்திருக்கிறார். பின்னர் […]