முசிறி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொட்டியம் தாலுக்கா மணமேடு என்ற இடத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்டதாக அதன் ஓட்டுனர் போலீசில் புகார் செய்திருந்தார். விசாரணையில், லாரியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பொருட்கள் திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள குடோனில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு நடத்திய போலீசார், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, […]