சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. […]
தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர சம்பளங்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை மறுசீரமைப்பு செய்ய நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் நிறுத்த முடிவு செய்திருக்கிகிறது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், […]