சென்னை : இன்றைய நாளின் (17-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், அஸ்வின் பேட்டி முதல் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் உலக செஸ் போட்டி வரையிலான செய்தி தொகுப்பைப் பற்றி பார்க்கலாம். ஓய்வை குறித்து பேசிய அஸ்வினின் பழைய பேட்டி வைரல்! அஸ்வின் ஒரு பழைய பேட்டியில் தனது ஓய்வைக் குறித்து பேசி இருப்பார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “நான் அனில் கும்ப்ளேவின் தீவிரமான ரசிகன். அதனால் அவரது சாதனையான 619 விக்கெட்டுகளை நான் முறியடிக்க மாட்டேன். நான் டெஸ்ட் போட்டியில் 618 விக்கெட்டுகள் எடுத்த உடனே எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். அது தான் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்” எனவும் கூறி இருந்தார். இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்பட்ட புதிய சிக்கல்! […]