கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தின் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். சிறப்பு காவல் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி 1,500 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.