அதிர்ச்சி..! குப்பை தொட்டியில் கிடந்த 5 மாத சிசு..! மருத்துவமனைக்கு சீல்..!

Baby

மாண்டியா-மைசூரு-பெங்களூரு ஆகிய பகுதிகளில் பெண் சிசுக்கொலை மோசடி கும்பலை போலீசார் கண்டுபிடித்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஹோஸ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் குப்பை தொட்டியில் ஐந்து மாத சிசு கண்டறியப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மூன்று செவிலியர்கள் உட்பட சில ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மருத்துவர் தலைமறைவாக … Read more

#BREAKING : தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில், காவேரி மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது, தொற்று பாதிப்பு குறித்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் … Read more

இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி…! தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுமா…?

இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் இந்த உலகையே ஆட்டி படைத்து வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியது. அதன்படி, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில், தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா … Read more

பிபிஇ பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக வசூலித்த தனியார் ஹாஸ்பிடல்.! ஷாக்காகிய கொரோனா நோயாளி.!

கொரோனா நோயாளி அணியும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வசூலித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் அதிகம்  வசூல் செய்து வருகின்றனர். அதற்காக பலர் புகார் அளித்தும் குற்றச்சாட்டுகள் கூறியும் வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளி அணியும் பிபிஇ என்ற பாதுகாப்பு கவச உடைக்கு ரூ. 96,000 கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை … Read more

தனியார் மருத்துவமனைகளை திறக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மதுரையில் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் , ஊரடங்கு தளர்வுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற சில மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இதற்கிடையில், பொதுமுடக்கம் காரணமாக அனைத்து கடைகளும் திறக்க … Read more

#மூடிய காரணம்- 120 தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

எந்தவொரு காரணமும்  இன்றி மதுரை மாவட்டத்தில் மூடப்பட்ட 120 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள்  உள்ளது. தற்போது இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக  தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கின்ற பொழுது மதுரை மாவட்டத்தில் சுமார் 120 தனியார் மருத்துவமனைகள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மூடப்பட்ட மருத்துவமனைகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் வினய் நோட்டீஸ்  … Read more

தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயம் – முதல்வர் உத்தரவு.!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கட்டணங்களை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சாதாரண அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா சிகிச்சை – தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு.?

கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் ஒரு நாளைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.23,182 வசூலிக்கலாம். சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றிக்காக நாள்தோறும் ரூ.9,600 வரை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது இந்திய மருத்துவ கவுன்சில் தமிழக பிரிவு. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. … Read more

அங்கீகாரம் ரத்து செய்யப்படும்-தனியார் மருத்துவமனைக்கு அரசு எச்சரிக்கை

தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பகீரங்க எச்சரிக்கை  விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில்  தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று  தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் இது  தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், மகப்பேறு, குழந்தைகளுக்கான சிகிச்சை, டயாலிசிஸ், நரம்பியல் தொடர்பான சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்க தவறும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது  தமிழக அரசு.