குஜராத்தில் போலி சுங்க சாவடி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில், தனிநபர்கள் குழு ஒரு வருடத்திற்கும் மேலாக போலி சுங்க சாவடி அமைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தனியார் நிலத்தில் நெடுஞ்சாலையை புறக்கணித்து போலி சுங்கச்சாவடி அமைத்து ஓராண்டுக்கு மேலாக அரசு […]
புதுச்சேரியில், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியது. தொழிற்சாலை முழுவதையும் கரும்புகை ஆக்கிரமித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, சேதாரப்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
வரும் மார்ச் 6ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது. பின்னர் இந்த முகாமில் தனியார் துறையை சேர்ந்த 15 நிறுவனங்கள் முகாமில் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட […]