சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி! திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! – ஓபிஎஸ்

மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஓபிஎஸ் அறிக்கை. அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் 50 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. … Read more

திமுக அரசாணையை எதிர்த்து அமமுக தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.! டிடிவி தினகரன் எச்சரிக்கை.!

காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவில், தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க … Read more

தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்

தி.மு.க.வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை. ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்த பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு துறைகள், … Read more

எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்தால், அரசுக்கு என்ன வேலை…? – சீமான்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம், கல்வி, மருத்துவம் என அனைத்தையும் தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்களது வேலை என்ன? தனியாருக்கு கொடுத்துவிட்டு லஞ்சம் வாங்கிட்டு, கையெழுத்துப்போட்டுட்டு உட்கார்ந்து இருப்பது தானா? என்றும், ரூ.100 லட்சம் கோடிக்கு திட்டம் … Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் பலி!

விருது நகர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று காலை பட்டாசு தயாரிக்க கூடிய பணி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் 55 … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!

இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, … Read more

அக்.,திறக்கிறதா?? தனியார் பள்ளிகள்!

பள்ளிகளை அக்டோபரில் திறப்பு குறித்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான பேரன்ட் சர்க்கிள் நிறுவனம் பள்ளி முதல்வர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம்  ஒன்றினை நடத்தியது. இந்த கூட்டத்தில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஒட்டுமொத்த பேரும் பங்கேற்று உரையாற்றினர்.அதில் பேசிய நிர்வாகிகள் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை … Read more

2 வயது குழந்தையின் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

நெல்லை மாவட்டத்தில் 2 வயதுடைய குழந்தை தெருவில் விளையாடிய போது அந்த வழியாக வந்த தனியார் வேன் அந்த குழந்தையின் மீது மோதியதில் சிகிச்சைக்கு சென்ற வழியிலேயே உயிரிழப்பு. இதுதொடர்பாக குழந்ந்தையின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெரிவை சேர்த்தவர் சுரேஷ் என்பவரின் மகன் 2 … Read more

இன்ப செய்தி.! விமானத்துக்கு இணையாக அதிக சொகுசுகள் கொண்டு களமிறங்கும் 2வது தேஜஸ் ரயில்.!

விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜனவரி 17-ம் தேதி அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின்  இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கி வைக்கப்படவிருக்கிறது. விமான சேவைகள் தான் முன்பில் இருந்து தனியார் படுத்தி அதிக சொகுசுகளை வழங்கி நடத்தி வருகிறது. தற்போது விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ … Read more

ஜாக்டோ-ஜியோ போராட்டம்… தனியார் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு…!!

தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, தனியார் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், குமலன் குட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்களின் அணுகுமுறையால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் … Read more