Puducherry Murder: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவரில், ஒரு குற்றவாளி சிறைக்குள் தற்கொலை நாடகம் ஆடி போலீசாரை தொந்தரவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன் (57) கருணாஸ் (19) என்ற இருவர் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Read More – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ […]
கைதிகள் விடுதலை தொடர்பான மனுக்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அளுநர் ஆர்என் ரவி பதலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு கூறியதாவது, கைதிகள் விடுதலை தொடர்பான அரசு அனுப்பிய கோப்புகளின் மீது […]
நீண்ட நாட்களாக குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரை அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல்அளிக்கவில்லை . இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி […]
தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி […]
ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்து முன் விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. இதுகுறித்த அறிவிப்பில், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வது குறித்த முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க உரிய விரிவான வழிமுறைகள் வகுத்து அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. […]
கைதிகளுடன் பேச அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில்,கொரோனா பரவல் காரணமாக சிறைக்கைதிகளுடன் தொலைபேசி அல்லது காணொளி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதி வழங்க கோரி கே. ஆர் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள குனுப்பூர் கிளை சிறைச்சாலையில் 113 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு உள்ள 70 கைதிகளுக்கு தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பல இடங்களில் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பல சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் கொரோனா பரவல் காரணமாக ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். சில சிறைச்சாலைகளில் கைதிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் அடைத்து […]
ஒடிசா மாநிலத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதுமுள்ள அணைத்து மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒடிசாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளத்துடன், தினசரி பாதிப்பும் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓடிசாவில் 9,793 […]
ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலைகளில் உள்ள கம்பியை அறுத்து விட்டு 13 கைதிகள் தப்பித்து ஓடியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் எந்த ஒரு பகுதியில் உள்ள மக்களும் கொரோனாவிற்கு தப்பித்துவிடவில்லை என்று தான் கூறியாக வேண்டும். இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன, பல்வேறு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலையில் பல்வேறு கைதிகள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். […]
ஹைதி நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்-அவ்-பிரின்சின் எனும் பகுதியில் உள்ள சிவில் சிறைச்சாலை ஒன்றில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தால் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைக்காவலர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த […]
தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு 18 வயது இளைஞன் கடை ஒன்றின் உரிமையாளரிடமிருந்து கடிகாரத்தையும் பணத்தையும் திருடியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் என்றால் பல நாட்களாக இருக்கவில்லை, இரண்டு மணி நேரங்கள் தான் இருந்துள்ளார். அந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீஸ் வளாகத்தில் இருந்த அவர் போலீசாரின் கதவில் துளையிட்டு அதன் வழியாக வெளியேற முயன்றுள்ளார். ஆனால் […]
திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்றால் முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் […]
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தி, சிறிய குற்றங்களுக்கான கைதான 51 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டு மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் […]
தமிழகம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், தற்போது கடைகள், ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர். தற்போதும் கோவை மத்திய சிறையிலிருந்து சொந்த ஜாமினில் 5 பெண்கள் உட்பட மொத்தம் 136 பேர் விடுதலை செய்துள்ளனர். மற்றவர்களுக்கும் இந்த கொரோனா தோற்று ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக கைதிகள் தங்களது சொந்த […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய , மாநில வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கொரோன முன்னெச்சரிக்கையாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் […]
மதுரை மத்திய சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 58 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். […]
கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிப்பு உள்ளது. உலக முழுவதும் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இதனால் […]
பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள் அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை […]