இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது அவருக்கு வயது 99. “ஆழ்ந்த துக்கத்தோடு தான் ராணி தனது அன்புக்குரிய கணவர், அவரது ராயல் ஹைனஸ் இளவரசர் பிலிப், எடின்பர்க் டியூக் இறந்ததை அறிவிக்கிறார். அவரது ராயல் ஹைனஸ் இன்று காலை விண்ட்சர் கோட்டையில் அமைதியாக காலமானார்” என்று குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பிலிப் கிரேக்க அரச குடும்பத்தை சேர்ந்தவர், 1921 இல் கிரேக்க தீவான கோர்பூவில் பிறந்தார். […]