பட்டுக்கோட்டையை சேர்ந்த காவலர் ராஜ்கண்ணன் என்பவருக்கு பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த 35 வயதான காவலர் ராஜ் கண்ணன் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் ஆற்றில் விழுந்த ஒருவரை தனது உயிரைப் பொருட்படுத்தாமல் காப்பாற்றினார்.இதனால்,இவருக்கு “பிரதமரின் உயிர்காக்கும் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.அவரைத் தொடர்ந்து நாடு முழுவதும் மொத்தம் 14 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,காவலர் ராஜ்கண்ணன் இது குறித்து கூறுகையில்,”ஒரு […]