தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கனமழை, பெரு வெள்ளத்தை தமிழக மக்கள் எதிர்கொண்டு உள்ளனர். வட தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் மக்கள் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதேபோல, தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அந்த ஆற்றின் கரையோர பகுதி மக்கள் வெள்ள பாதிப்பால் மிகுந்த பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். […]