அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர்,முதல்வர் பேசியதாவது: “மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செய்ய அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும்.எனவே,எனது உரையை சுருக்கமாக கூறுகிறேன். நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்,இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி பணியாற்றுகிறார் என்று […]
நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல். நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல் கூறியுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீ தரன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர். அறநிலைத்துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அர்ச்சர்களுக்கான தகுதிகள் குறித்து உயர்நிலை குழு பரிந்துரைப்படியே பயிற்சி […]
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், 58 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களும் பணி நியமன ஆணை […]
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் அறிவிப்பு […]
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்குத்தொகை மற்றும் தட்டு காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள […]