வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!
வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றம் இல்லை. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.36 குறைந்து, ரூ.2,009க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,045 ஆகி இருந்த நிலையில், தற்போது 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இல்லை […]