தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தேமுதிகவினர் தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது. ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 56 வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் அங்கு சென்றனர். போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா, குமரெட்டியாபுரம் போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் […]