Tag: PresidentRamNathKovind

ஓபிசி பிரிவினர்: மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல். இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பிரிவினர் பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா டெல்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு […]

#OBC 2 Min Read
Default Image

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவை சிகிச்சை.!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து ராணுவ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Armyhospital 1 Min Read
Default Image

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வரும் 19ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். கர்நாடகா மேகதாதுவில் அணை தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்றுள்ள நிலையில், இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளனர். தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வலியுறுத்த உள்ளார். இந்த நிலையில், நாளை மறுநாள் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்திருந்தார். ஆளுநர் இதை ஏற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். மேலும் புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவையும் குடியரசு தலைவர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

cmnarayanasamy 2 Min Read
Default Image

2021-2022 மத்திய பட்ஜெட் : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் பட்ஜெட் உரையுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குழுவினருடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

budget2021 2 Min Read
Default Image

ஒற்றுமையே நமது நாட்டின் மிகப்பெரிய பலம் -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியுள்ளது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.அவரது உரையில், கடந்த ஆண்டில் உயிரிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது அஞ்சலியை […]

budget2021 3 Min Read
Default Image

72 வது குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

டெல்லி ராஜபாதையில் குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராஜபாதை குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்வையிட 25,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜபாதைக்கு வந்த குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார்.ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்கள் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் […]

PresidentRamNathKovind 2 Min Read
Default Image

குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோருக்கு முதலைச்சர் பழனிசாமி வாழ்த்து

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (11.202) புத்தாண்டை முன்னிட்டு  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும்,  இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக […]

#PMModi 2 Min Read
Default Image

வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் , பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின்  96-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி  மரியாதை செலுத்தினார்கள்.மேலும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள். 96 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.மக்களவை செயலகத்தால் வெளியிடப்பட உள்ள இந்த புத்தகம் […]

#PMModi 3 Min Read
Default Image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின்  பிறந்த நாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் ,  உங்கள் 75 வது பிறந்தநாளுக்கு […]

PresidentRamNathKovind 3 Min Read
Default Image

“இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றினை இழந்துவிட்டது!” – குடியரசுத் தலைவர் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பி. உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்தார். அவர், 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் மறைவிற்கு […]

PresidentRamNathKovind 3 Min Read
Default Image

பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்..!

கடந்த ஜூலை 29-ம் தேதி புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து “இஸ்ரோ” முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமைச்சரவையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு […]

PresidentRamNathKovind 2 Min Read
Default Image