அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். புது தில்லி: உத்திரபிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் பிரிவில் இருந்து வருகிறது. இது தொடர்பாக, நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கபட்ட நீதிபதிகள்: நீதிபதி பிரகாஷ் பாடியா, நீதிபதி அலோக்மதூர், நீதிபதி பங்கஜ் பாட்டியா, […]
இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை உடனடியாக கலைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அண்மையில் மத்திய அரசு இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத 16 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ,திமுக தலைவர் […]
பிரேசில் அதிபர் தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தார். பிரேசில் அதிபர் பொல்சொனரோவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர். இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நேற்று பிரேசில் அதிபர் தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு இந்திய […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். இன்று செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியாளரும், தத்தத்துவவியலாளருமான இவரது பிறந்த நாளைத்தான் 1962 முதல் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.