துனிசியாவில் அரசை கலைத்து, நிர்வாகத்தை தானே கையில் எடுப்பதாக அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் அறிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடான துனிசியாவில் அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாட்டின் நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாகவும், தனக்கு உதவ பிரதமர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் துனிசியா அதிபர் கைஸ் சையத் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த […]