இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.இதனை முன்னிட்டு,பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும்,எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து,அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதே சமயம்,தற்போதைய துணைக் குடியரசுத்தலைவராகவுள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் […]
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்த பாரூக் அப்துல்லா. இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பாரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்து பாரூக் அப்துல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சி பொது வேட்பாளராக என்னை கருத்தில் கொண்டு […]