குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிக்ககாலம் இன்றுடன் முடிவடைகிறது.இதனைமுன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் இரவு 7 மணி முதல் அவரது உரை ஒளிபரப்படுகிறது. திரௌபதி முர்மு இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பதவியேற்கிறார்.
பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக குரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுக்கு,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி,ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில்,40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து,புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]
உத்தராகண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார். உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக கவர்னரின் செயலாளர் பி.கே.சாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உத்தராகண்ட் ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மவுரியா, ஆக்ரா மேயராக இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி […]
குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாகவும்,தசராவாகவும்,மகாநவமியாகவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டு மக்களுக்கு தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தசரா வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த திருவிழா சத்தியத்தின் வெற்றியையும், அநீதியின் மீதான பொய்யையும் குறிக்கிறது. தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணத்தை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது என ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து […]
இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு நாட்டில் உள்ள பெண்கள் தங்கள் சகோதர்கள் கையில் ராக்கியை கட்டுவது வழக்கம். இதனால், ரக்க்ஷா பந்தனை தொடர்ந்து, அனைத்து தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ நர்சிங் சேவை மற்றும் ஜனாதிபதியின் மாளிகையில் உள்ள கிளினிக் செவிலியர்களுடன் செவிலியர்களுடன் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொண்டாடினார்.
டெல்லியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை […]
நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் […]
கனடா பிரதமர் அரசு முறைப்பயணமாக பிப்ரவரி 17ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்தியாவிற்கான கனடா தூதரக செய்தி தொடர்பாளர் கூறியது, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவு பிப்ரவரி 17-ம் தேதி அரசு முறைப்பயணமாக இந்தியா செல்கிறார். பிப்ரவரி 23-ம் தேதி வரை இந்தியா சுற்று பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர் இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். கனடா பிரதமருடன் 18 அமைச்சர்களும் இந்தியா வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.